search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகவதி அம்மன் கோவில்"

    • ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    • மூன்று நாள் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா இன்று (12-ந் தேதி) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று சுமங்கலி பூஜை, நாளை அஸ்வதி பொங்காலை, நாளை மறுநாள் திருவிளக்கு பூஜை மற்றும் பரிசளிப்பு விழா என மூன்று நாளும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதையொட்டி இன்று காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு பஜனை, 10.30 மணிக்கு சத்சங்கம், மதியம் 12 மணிக்கு உச்சபூஜை போன்றவை நடந்தது.

    மாலை 5.15 மணிக்கு சுமங்கலி பூஜை நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்கின்றனர்.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது. இரண்டாம் நாளான நாளை (13-ந் தேதி) காலை 9 மணிக்கு மங்கள வாத்தியம், 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு நடக்கிறது.

    12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடக்கிறது. மூன்றாம் நாள் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோயில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரி சனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவ குமார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரமேஷ், கணக்காளர் ஸ்ரீ ராமச் சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண் ணப்பட்டது.

    உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.74ஆயிரத்து 946 வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர் கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவில் வளாகத்தில் வைக் கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    • பகவதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வருகிற சனிக்கிழமை (நாளை) காலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி:


    கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.


    இதில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை விவேகானந்தா கேந்திர நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அதே சமயம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரித்து வருகிறது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்துவருகிறார்கள்.

    இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.


    தினமும் காலை ௮ மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணிவரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற சனிக்கிழமை (நாளை) காலையில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 8மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    இந்த தேரோட்டத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகா னந்த கேந்திர தொழி லாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பதற்கு வசதியாகவும் சுற்றுலாப் பயணிகள் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டு தேர் இழுப்பதற்கு நாளைக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்குவதற்கு பதிலாக 2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்குகிறது.

    இந்த தகவலை கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாபன் தெரிவித்து உள்ளார்.

    • கலையரங்கத்தின் முன்பு கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களும் அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும் தாங்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோ, கார், வேன், ஜீ்ப் டிரக்கர், மினி பஸ் போன்ற கனரக வாகனங்களையும் கன்னியாகுமரி சன்னதி தெருவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்த கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 8.30மணிக்கு அடைக்கப்படும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் இந்த கோவிலில் தரிசனத்துக்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நுழைவு வாசலில் எந்த நேரமும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

    பகவதிஅம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமய சொற்பொழிவு நடத்துவதற்காக கோவிலின் நுழைவு வாசல் முன்பு மிக பிரம்மாண்டமான கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கலையரங்க த்தின் முன்பு கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களும் அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும் தாங்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். சிலர் தங்களது இரு சக்கர வாகனங்களை காலையில் இந்த கலையரங்கம் முன்பு வைத்து விட்டு இரவு தான் திரும்பி வந்து எடுத்துச் செல்கிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்க பகுதி இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் "பார்க்கிங்" இடமாக மாறிவிட்டது. தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுவதால் இந்த பகுதி கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

    இதற்கிடையில் ஆட்டோ, கார், வேன், டிரக்கர், ஜீப், மினி பஸ் போன்ற பெரிய கனரகவாகனங்களும் இந்த சன்னதி தெரு பகுதியில் உள்ள லாட்ஜுகள் முன்பு ஆங்காங்கேபோக்குவரத்துக்குஇடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் கன்னியாகுமரிபகவதி அம்மன் கோவிலில்வைகாசிவிசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் 10 நாட்களும் இந்த சன்னதி தெரு வழியாகத் தான் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்துகொண்டிருக்கிறது.

    மேலும் இந்த 10 நாட்களும் இந்த கோவிலின் முன்புஉள்ள கலையரங்கத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. இதனால் இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் கோவிலுக்குள் எளிதாக சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வர முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள்.

    எனவே கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் கலையரங்கம்முன்பு இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு போக்கு வரத்து போலீசார் தடை விதிக்கவேண்டும் என்றும் அதற்கு பதிலாக இந்த இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இட வசதி செய்து தர வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோ, கார், வேன், ஜீ்ப் டிரக்கர், மினி பஸ் போன்ற கனரக வாகனங்களையும் கன்னியாகுமரி சன்னதி தெருவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×